Advertisement

தமிழகத்தில் ஜூலை 10 ஆம் தேதி பொதுவிடுமுறை

By: vaithegi Fri, 01 July 2022 12:46:30 PM

தமிழகத்தில் ஜூலை 10 ஆம் தேதி பொதுவிடுமுறை

தமிழகம்: உலகளவில் உள்ள முஸ்லீம் மக்களால் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை முஸ்லிம்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நாளில் முஸ்லீம் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அந்த கறியை அனைத்து மதத்தினருக்கும் பங்கு கொடுத்து சந்தோசமாக அன்றைய தினத்தை கொண்டாடுவார்கள். அதற்காக கால்நடைகளை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வாங்கி வளர்த்து வருவார்கள்.

இதையடுத்து இந்த ஆண்டு ஜில் ஹாஜி பிறை இன்று (ஜூலை 1) தென்பட்டதால் வருகிற ஜூலை 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று துல் ஹஜ் மாத பிறை என்று ஷரியத் முறைப்படி தென்பட்டது. நாளை துல் ஹஜ் மாத முதல் பிறாஈ என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது

public holiday,bakrit festival ,பொதுவிடுமுறை,பக்ரீத் பண்டிகை

அதனால் வருகிற ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தி புத்தாடை அணிந்தும் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

Tags :