Advertisement

தமிழகத்தில் வருகிற ஜூலை 10ம் தேதி பொது விடுமுறை

By: vaithegi Wed, 06 July 2022 5:57:16 PM

தமிழகத்தில் வருகிற ஜூலை 10ம் தேதி பொது விடுமுறை

தமிழகம்: தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இந்த நாள் ஒரு தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை ஜூலை 1 ஆம் தேதி தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

holiday,jill haji ,விடுமுறை ,ஜில் ஹாஜி

அந்த வகையில் பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுக்க ஆடுகள், செம்மறிஆடுகள் விற்பனை மிகவும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மேலப்பாளையம் கால்நடை விற்பனை சந்தையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கி இருக்கின்றனர். பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமிய சகோதரர்கள் புது உடை வாங்கி தயாராகி வருகின்றனர்.

Tags :