Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் மாதிரிகள் சோதனை; ஐசிஎம்ஆர் தலைவர் தகவல்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் மாதிரிகள் சோதனை; ஐசிஎம்ஆர் தலைவர் தகவல்

By: Nagaraj Wed, 27 May 2020 5:02:37 PM

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1.1 லட்சம் மாதிரிகள் சோதனை; ஐசிஎம்ஆர் தலைவர் தகவல்

இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.1 லட்சம் மாதிரிகள் சோதனையிடப்படுவதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜன., மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து சோதனையிட ஒரே ஒரு பரிசோதனை ஆய்வகம் தான் இருந்தது. பிப்., மாத முடிவில் 14 அரசு ஆய்வகங்களும், மார்ச் முடிவில் 125 அரசு மற்றும் 52 தனியார் ஆய்வகங்களும் இருந்தன.

இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 612 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் 430 அரசு ஆய்வகங்கள், 182 தனியார் ஆய்வகங்கள் ஆகும்.

figure,one lakh,examination,assumptions,india ,
எண்ணிக்கை, ஒரு லட்சம், பரிசோதனை, அனுமானங்கள், இந்தியா

இதனால் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் குறைந்த அளவிலேயே இறப்பு விகிதம் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும். ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறதா, இல்லையா என்பதைக் காட்டிலும், அதிலிருந்து அவர் பிழைத்து வர வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பது, சில ஊசிகளைப் போடுவது போன்ற இவையனைத்தும் வெறும் அனுமானங்கள்தான். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் அதிகமாக உள்ளது.

ஒரு லட்சம் மக்கள் தொகையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் மற்ற நாடுகளை விட ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ளோம். இவற்றில் நாம் திறம்பட செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|