Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இயல்பை விட 11 சதவீதம் வரை கூடுதல் மழை; வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இயல்பை விட 11 சதவீதம் வரை கூடுதல் மழை; வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Thu, 09 July 2020 2:32:42 PM

தமிழகத்தில் இயல்பை விட 11 சதவீதம் வரை கூடுதல் மழை; வானிலை மையம் அறிவிப்பு

கூடுதல் மழை பெய்துள்ளது... தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. சென்னையின் சில பகுதிகளில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, 9; ஊத்துக்கோட்டை, கடையநல்லுார், 8; பண்ருட்டி, தியாகதுருகம், 7; பள்ளிப்பட்டு, 6; திருவாலங்காடு, அரிமளம், காவேரிப்பாக்கம், வளவனுார், 5; காஞ்சிபுரம், திருச்செங்கோடு, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

extra rain,tirunelveli,dindigul,puducherry ,கூடுதல் மழை, திருநெல்வேலி, திண்டுக்கல், அதிகம், புதுச்சேரி

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, ஜூன், 1 முதல் ஜூலை, 7 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது.

புதுச்சேரியில், 30 சதவீதம் மழை குறைந்துள்ளது. திருநெல்வேலி, 60; சென்னை, 49; கடலுார், 38; நாமக்கல், திருவள்ளூர், 25; துாத்துக்குடி மாவட்டங்களில், 36 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கரூர், 247; பெரம்பலுார், 118; ராமநாதபுரம், 204; சிவகங்கை, 48; திருச்சி, 76; புதுக்கோட்டை, 104;, திண்டுக்கல் மாவட்டங்களில், 78 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :