Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேலில் இருந்து 110 நபர்கள் இதுவரை தமிழ்நாடு அழைத்துவரப்பட்டுள்ளனர் .. அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிப்பு

இஸ்ரேலில் இருந்து 110 நபர்கள் இதுவரை தமிழ்நாடு அழைத்துவரப்பட்டுள்ளனர் .. அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Mon, 16 Oct 2023 10:46:21 AM

இஸ்ரேலில் இருந்து 110 நபர்கள் இதுவரை தமிழ்நாடு அழைத்துவரப்பட்டுள்ளனர் ..  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிப்பு

சென்னை இஸ்ரேலில் இருந்து 110 பேர் மீட்பு ...இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்ரேலில் இருந்து ஆப்ரேஷன் அஜய் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 24 பேர் நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் காரணமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்பு எண் வழங்கப்பட்டு, அதில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 128 பேர் விவரங்கள் மத்திய அரசிற்கு கொடுக்கப்பட்டு தற்போது மீட்கப்பட்டு கொண்டு வருகிறார்கள். 128 நபர்களும் டெல்லி அழைத்து வரப்படுகிறார்கள்.

minister m. subramanian,tamil nadu,israel ,அமைச்சர் மா.சுப்ரமணியன் ,தமிழ்நாடு ,இஸ்ரேல்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ளவர்கள் மூலம் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்கி சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். தமிழ்நாடு வரும் நபர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம். மதுரை, கோவை வருபவர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வரவேற்று தேவையான உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து நேற்றுவரை மொத்தம் 114 என அடையாளம் காணப்பட்டது. பின்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மொத்தம் 128 நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை 110 நபர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். இன்னும் 18 நபர்கள் மட்டுமே வரவேண்டியுள்ளது. 95% உயர் படிப்பிற்காக இஸ்ரேல் சென்று உள்ளனர். அவர்களுக்கு என்ன வகையான உதவி தேவை என கோருக்கிறார்களோ அதை செய்து தருவதற்கு அரசு தயராக உள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய இணையதளம் விரைவில் வெளியிடப்படவுள்ளது” என அவர் பேசினார்.


Tags :