Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Wed, 09 Aug 2023 1:02:43 PM

சுதந்திர தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: 4 நாட்கள் விடுமுறை – 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ....தமிழகத்தில் இந்தாண்டு சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 2-வது சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் திங்கள் என்று மொத்தமாக 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்களிலும் திங்கட்கிழமை விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைக்கும்.

இதனால், விடுமுறை ஓட்டி சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

special buses,holidays,tamil nadu transport corporation ,சிறப்பு பேருந்துகள் ,விடுமுறை ,தமிழ்நாடு போக்குவரத்து கழகம்

இதையடுத்து பொதுவாகவே விடுமுறை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

அதாவது, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 500 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 400 சிறப்பு பேருந்துகளும், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. எனவே, கூட்ட நெரிசலை தடுப்பதற்காக தற்போதையில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tags :