Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேரறிஞர்அண்ணாவின் 112-வது பிறந்த நாள்: தி.மு.க. தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர்அண்ணாவின் 112-வது பிறந்த நாள்: தி.மு.க. தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

By: Monisha Tue, 15 Sept 2020 09:53:55 AM

பேரறிஞர்அண்ணாவின் 112-வது பிறந்த நாள்: தி.மு.க. தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருப்பவர் பேரறிஞர் அண்ணா. இவர் காஞ்சி தந்த காவியத் தலைவர் என்று போற்றப்படுகிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேரறிஞர் அண்ணா. இன்று பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

anna,birthday,dmk,mk stalin,respect ,பேரறிஞர்அண்ணா,பிறந்த நாள்,திமுக,முக ஸ்டாலின்,மரியாதை

இதையொட்டி, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

Tags :
|
|