Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 11,321 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 11,321 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

By: Monisha Sun, 16 Aug 2020 1:29:05 PM

சென்னையில் கொரோனாவுக்கு 11,321 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,15,444 ஆக உள்ளது. 11,321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,447 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,339
அண்ணா நகர் - 1,162
தேனாம்பேட்டை - 710
தண்டையார்பேட்டை - 576
ராயபுரம் - 808
அடையாறு - 1,118
திரு.வி.க. நகர் - 610
வளசரவாக்கம் - 1,002
அம்பத்தூர் - 1,410
திருவொற்றியூர் - 283
மாதவரம் - 546
ஆலந்தூர் - 594
பெருங்குடி - 456
சோழிங்கநல்லூர் - 425
மணலி - 131

Tags :
|