Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 1,134 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 1,134 பேருக்கு கொரோனா

By: vaithegi Thu, 23 Mar 2023 11:46:33 AM

நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 1,134 பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.28 கோடியாக அதிகரிப்பு .

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,134 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,india,union ministry of health ,கொரோனா,இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,605 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,816 ஆக உள்ளது.

மேலும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,60,997 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,65,28,710 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,530 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|