Advertisement

அசாமில் சித்ராங் சூறாவளியால் 1146 பேர் பாதிப்பு

By: Nagaraj Wed, 26 Oct 2022 10:20:09 AM

அசாமில் சித்ராங் சூறாவளியால் 1146 பேர் பாதிப்பு

அசாம்: அசாமில் சித்ராங் சூறாவளியால் 83 கிராமங்களைச் சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.


வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள சித்ராங் புயல் நேற்று இரவு 9.30 முதல் 11.30 மணிக்குள் வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் பரிசல் கடற்கரையில் கரையை கடந்தது. சூறாவளி காரணமாக மணிக்கு 80 கி.மீ. காற்று வேகமாக வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. இதை தொடர்ந்து, அசாம் உட்பட இந்தியாவின் 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த சூறாவளி வங்காளதேச எல்லை மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் திரிபுராவில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

bangladesh,bengal,centered,cyclone chitrang,made ,அசாம், சிட்டகாங், சித்ராங் புயல், வங்காள விரிகுடா

இதேபோல், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்படி, சித்ராங் புயல் அசாம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களை கடந்தது.

அசாமில் சித்ராங் சூறாவளியால் 83 கிராமங்களைச் சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் அசாமில் உள்ள நகாவன் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கலியாபூர், பாமுனி, சக்முடியா தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

Tags :
|