Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 11,856 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 11,856 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Wed, 05 Aug 2020 1:14:41 PM

சென்னையில் கொரோனாவுக்கு 11,856 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம் வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,349
அண்ணாநகர் - 1,198
அடையாறு - 1,012
திரு.வி.க.நகர் - 952
வளசரவாக்கம் - 900
தேனாம்பேட்டை - 804
ராயபும் - 796
தண்டையார்பேட்டை - 645
மாதவரம் - 568
ஆலந்தூர் - 520
பெருங்குடி - 484
சோழிங்கநல்லூர் - 482
திருவொற்றியூர் - 423
மணலி - 89
அம்பத்தூர் - 1,401

Tags :
|