Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 05 July 2022 11:45:30 AM

திருநெல்வேலி மாவட்டத்தில்  ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த நெல்லையப்பர் கோயில், புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும் காந்திமதி அம்மை வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.

குறிப்பாக ஆண்டுதோறும் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாதத் தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தலத்தின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. அத்தகைய தேர் திருவிழா வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

local holiday,tirunelveli ,உள்ளூர் விடுமுறை,திருநெல்வேலி

இந்த உள்ளூர் விடுமுறை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

அதனால் அத்தைகைய பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 23ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :