Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்ய வாய்ப்பு

12 மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Sat, 20 May 2023 10:35:24 PM

12 மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

12 districts,12 மாவட்டங்கள்,analysis,center,chance,chennai,heavy rain,notification,weather , அறிவிப்பு, ஆய்வு, கனமழை, சென்னை, மையம், வானிலை, வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கரூர் மாவட்டங்கள், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 22 முதல் 24 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் வெப்ப அழுத்தத்தால் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

Tags :
|
|