Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 12 பேருக்கு கொரோனா

பெங்களூருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 12 பேருக்கு கொரோனா

By: Nagaraj Wed, 28 Dec 2022 8:00:33 PM

பெங்களூருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் 12 பேருக்கு கொரோனா

பெங்களூரு: 12 பேருக்கு கொரோனா... சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 12 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, 12 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த 37 வயது பயணி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.


பணி நிமித்தமாக சீனா சென்றுவிட்டு பெங்களூரு வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

health minister sudhakar,new type of omicron virus, ,இலவச சிகிச்சை, ஓமிக்ரான் வைரஸ், பெங்களூரு

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், “கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 12 பேர் நலமாக உள்ளனர்.

அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.


எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய வகை ஓமிக்ரான் வைரஸுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது,” என்றார்.

Tags :