Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாலைத்தீவில் சிக்கி தவித்த 120 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மாலைத்தீவில் சிக்கி தவித்த 120 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

By: Nagaraj Sun, 05 July 2020 4:32:46 PM

மாலைத்தீவில் சிக்கி தவித்த 120  இலங்கையர்கள் நாடு திரும்பினர்

120 இலங்கையர்கள் நாடு திரும்பினர்... மாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

200க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பல நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் விமான சேவை, உள்நாட்டு போக்குவரத்து சேவை போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

examination,airport,maldives,returned home ,
பரிசோதனை, விமான நிலையம், மாலைத்தீவு, தாயகம் திரும்பினர்

இதனால் வெளிநாடுகளில் கல்வி, பணி உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்று சிக்கி தவிப்பர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி அழைத்து வருகிறது. அந்த வகையில் மாலைத்தீவில் சிக்கி தவித்த இலங்கையர்களை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :