Advertisement

இந்தியாவில் புதியதாக 125 பேருக்கு தொற்று உறுதி

By: vaithegi Fri, 27 Jan 2023 2:24:28 PM

இந்தியாவில் புதியதாக 125 பேருக்கு தொற்று உறுதி

இந்தியா: சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்த வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

infection,vaccine,corona ,தொற்று ,தடுப்பூசி ,கொரோனா

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1896 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,739 பேர் ஆக உள்ளது. இதுவரை மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,49,802 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,36,02,459 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 34,835 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :