Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள்ளக்குறிச்சி பள்ளி விவகார வன்முறை சம்பவத்தில் 128 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி விவகார வன்முறை சம்பவத்தில் 128 பேர் கைது

By: Nagaraj Mon, 18 July 2022 10:13:21 PM

கள்ளக்குறிச்சி பள்ளி விவகார வன்முறை சம்பவத்தில் 128 பேர் கைது

கள்ளக்குறிச்சி: 128 பேர் கைது... கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். விடுதி மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், மாணவி கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை லேசான தடியடி நடத்தி விரட்ட போலீசார் முயன்ற நிலையில், பள்ளி வளாகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வகுப்பறைகளை சூறையாடினர். பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

policemen,injury,violence,kallakurichi,128 people arrested ,காவலர்கள், காயம், வன்முறை, கள்ளக்குறிச்சி, 128 பேர் கைது

கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல் வாகனங்களுக்கும் தீவைத்து எரித்தனர். பதற்றத்தை தணிக்க அதிவிரைவுப் படையினரை வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

கலவரம் நடந்த பகுதியில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தனர். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாணவி உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வன்முறையில் டி.ஐ.ஜி., எஸ்.பி., உள்பட 52 காவலர்கள் காயமடைந்ததாகவும் கூறினார்.

Tags :
|