Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்திற்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தேனி மாவட்டத்திற்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 27 Apr 2023 12:15:46 PM

தேனி மாவட்டத்திற்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தேனி : தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் வருகிற மே 12 ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ....

ஒவ்வொரு ஆண்டும் தேனி அருகே அமைந்துள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமான ஒன்று.

local holiday,theni , உள்ளூர் விடுமுறை ,தேனி

இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு வந்து அக்னி சட்டி, காவடி, மாவிளக்கு, கரகம் போன்ற நேத்தி கடன்களை பக்தர்கள் செய்து விட்டு செல்வதுண்டு. மேலும், இந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் வருகிற மே 9 ஆம் தேதி மலர் வாகனத்தில் கௌமாரியம்மன் உலா வருதல், பத்தாம் தேதி முத்து பல்லக்கில் கௌமாரியம்மன் புறப்படுதல் மற்றும் வருகிற மே 11 ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் கௌமாரியம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.

இதனை தொடர்ந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு வருகிற மே 12 ஆம் தேதி நடைபெறயிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக வருகிற மே 16ஆம் தேதி திருவிழாவை நிறைவு செய்யும் விதமாக கௌமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தன்று மே 12-ம் தேதி தேனி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :