Advertisement

மே 12ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sun, 07 May 2023 11:07:20 AM

மே 12ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தேனி : தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள கோவில் திருவிழா காரணமாக வருகிற 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ...

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வருகிற மே 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடக்க உள்ளது. கொடியேற்றம் முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது.

theni,a local holiday ,தேனி ,உள்ளூர் விடுமுறை

இதனை அடுத்து இந்த விழாவில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் நடைபெறும் மே 12 - ம் தேதி அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற மே 27 -ம் தேதியான சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் எனவும், முக்கிய பணிகளுக்காக மாவட்ட கருவூல அலுவலகம் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|