Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 11 Nov 2022 12:28:04 PM

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி : நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ..... வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்று (நவ. 11) தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

puducherry,karaikal,holiday ,புதுச்சேரி ,காரைக்கால்,விடுமுறை

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சுற்றி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த வகையில் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tags :