Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட குறைவு

புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட குறைவு

By: vaithegi Mon, 08 May 2023 1:59:48 PM

புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட  குறைவு


புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 ஆக உள்ளது .... தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திலிருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்தாண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

pass rate,puducherry , தேர்ச்சி விகிதம் ,புதுச்சேரி


இதேபோன்று புதுச்சேரியில் தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 ஆகும். கடந்தாண்டு 96.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட 3.46 சதவீதம் தேர்ச்சி வீதம் குறைந்து உள்ளது. புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் ஒருவர்,

இதையடுத்து இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 80 பேர், உயிரியலில் 38 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 132 பேர், கணிதத்தில் 8 பேர், தாவரவியலில் 6 பேர், விலங்கியலில் 4 பேர், பொருளியலில் 37 பேர், வணிகவியலில் 157 பேர், கணக்கு பதிவியலில் 138 பேர், வணிக கணிதத்தில் 39 பேர், வரலாற்றில் ஒருவர், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

Tags :