Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முக்கியமான வழித்தடத்தில் 130 கி.மீ. வரை வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்

முக்கியமான வழித்தடத்தில் 130 கி.மீ. வரை வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்

By: vaithegi Thu, 07 Sept 2023 12:00:53 PM

முக்கியமான வழித்தடத்தில் 130 கி.மீ. வரை வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்


சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர்,சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடத்தில் மணிக்கு130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து மொத்தம் 413 கி.மீ.தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இந்த பாதைகளில் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இதுதவிர, 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் வேகம் 110 கி.மீ. இருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

railways,trains ,ரயில்வே ,ரயில்கள்

இதையடுத்து இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட வுள்ளன. இதற்காக, ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தபாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, பயண நேரம் 45 நிமிடம் வரை குறையும்.இதுபோன்று, ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் வழித்தடத்தில் விரைவு ரயில்களை 110 முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.

Tags :