Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 13,371 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 13,371 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Wed, 26 Aug 2020 2:38:05 PM

சென்னையில் கொரோனாவுக்கு 13,371 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,27,949 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது 13,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,548
அண்ணா நகர் - 1,547
தேனாம்பேட்டை - 884
தண்டையார்பேட்டை - 809
ராயபுரம் - 862
அடையாறு - 1,258
திரு.வி.க. நகர் - 1,042
வளசரவாக்கம் - 1,098
அம்பத்தூர் - 1,197
திருவொற்றியூர் - 260
மாதவரம் - 574
ஆலந்தூர் - 635
பெருங்குடி - 556
சோழிங்கநல்லூர் - 564
மணலி - 161

Tags :
|