Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 13,743 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 13,743 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Sat, 25 July 2020 1:44:18 PM

சென்னையில் கொரோனாவுக்கு 13,743 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சக்கட்ட அளவில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

சென்னையில் 21வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை 76,494 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு 13,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் 58.36 சதவீதம் மற்றும் பெண்கள் 41.64 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:-

கோடம்பாக்கம் - 2,189
அண்ணா நகர் - 1756
திரு.வி.க. நகர் - 1221
அடையாறு - 1155
தேனாம்பேட்டை - 1136
அம்பத்தூர் - 996
வளசரவாக்கம் - 846
ராயபுரம் - 817
தண்டையார்பேட்டை - 591
ஆலந்தூர் - 536
பெருங்குடி - 417
திருவொற்றியூர் - 413
மாதவரம் - 407
சோழிங்கநல்லூர் -309
மணலி - 196

Tags :