Advertisement

இந்த மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 01 Mar 2023 10:04:08 AM

இந்த மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். எனவே அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

இந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து–மாரியம்மன் வீதிஉலா நடைபெற்று கொண்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழாவன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

local holiday,pudukottai ,உள்ளூர் விடுமுறை,புதுக்கோட்டை

இதையடுத்து இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. எனவே விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்று அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கவிதா ராமு அவள் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணிநாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :