Advertisement

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பு

By: Nagaraj Tue, 03 Nov 2020 5:50:25 PM

14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பு

விலக்கு அளிக்கப்பட்டது... சில கனடா- அமெரிக்க எல்லை நகரங்களில் வசிப்பவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த விலக்கு காம்போபெல்லோ தீவு, நியூ பிரன்சுவிக் மற்றும் ஸ்டீவர்ட், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு ஆங்கிள், மினசோட்டா மற்றும் ஹைடர், அலாஸ்காவில் வசிப்பவர்களுக்கு பொருந்தும்.

exempt,granted,border,canada,usa ,விலக்கு, அளிக்கப்பட்டது, எல்லை, கனடா, அமெரிக்கா

ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அந்த நான்கு எல்லை நகரங்களில் வசிப்பவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறுவார்கள்.

நெருங்கிய கனேடிய அல்லது அமெரிக்க சமூகத்திலிருந்து உணவு அல்லது மருத்துவச் சேவைகள் போன்ற வாழ்க்கையின் தேவைகளைப் பெற அவர்கள் எல்லையைத் தாண்டினால் மட்டுமே அது பொருந்தும்.

இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணம் நவம்பர் 21ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|