Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

By: Karunakaran Thu, 17 Sept 2020 12:09:54 PM

மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக 2 ஷிப்ட் என பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் உடல் நல பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ் (மூவரும் காங்கிரஸ்), ஏ.நவநீத கிருஷ்ணன் (அ.தி.மு.க.), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), டாக்டர் நரேந்திர ஜாதவ் (சுயே.), மனஸ் ரஞ்சன் புனியா (இருவரும் திரிணாமுல் காங்கிரஸ்), பரிமால் நத்வானி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), ஹிஷே லச்சுங்பா (எஸ்.டி.எப்.) ஆகியோர் தங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தனர்.

manmohan singh,chidambaram,leave,state assembly meetings ,மன்மோகன் சிங், சிதம்பரம், விடுப்பு, மாநில சட்டசபை கூட்டங்கள்

மேலும், வி.லட்சுமிகாந்த ராவ், பந்த பிரகாஷ் (இருவரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி), மகேந்திர பிரசாத் (ஐக்கிய ஜனதா தளம்), கே.ஜி.கென்யே (என்.பி.எப்.) ஆகியோரும் விடுமுறை அளிக்குமாறு கேட்டிருந்தனர். தற்போது அவர்களுடைய கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை அவர்களுக்கு விடுமுறை அளித்து உள்ளது.

இவர்களில் 11 பேர் தங்கள் வயது பிரச்சினையை கருத்தில் கொண்டு, இந்த கூட்டத் தொடர் முழுவதும் சபைக்கு வராமல் இருக்க விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொண்டு இருந்தனர். 70 வயதிற்கு மேற்பட்டோர் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டாம் என முன்பே அறிவுத்தப்பட்டது.

Tags :
|