Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு

பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு

By: Nagaraj Mon, 12 June 2023 11:12:27 PM

பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பிபோர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. புயல் தற்போது துவாரகாவில் இருந்து தென்-தென்மேற்கே 380 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று ஜூன் 15 மதியம் குஜராத்தின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா மாநிலத்தின் கட்ச் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

144 prohibition order,gulf coast,june 16,kutch ,144 தடை, உத்தரவு, கடலோரப் பகுதி, கட்ச், ஜூன் 16, வளைகுடா,

அதன்படி குஜராத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புயல் முடியும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புயல் ஜூன் 15-ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதால், கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் ஜூன் 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :