Advertisement

உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

By: Nagaraj Fri, 12 May 2023 6:30:43 PM

உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

உடுப்பி: 144 தடை உத்தரவு... கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளதால் உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 72 புள்ளி 67 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த 440 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50,000க்கும் மேற்பட்ட மையங்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

144 prohibition,district,order,tomorrow,udupi, ,உடுப்பி, உத்தரவு, நாளை, மாவட்டம். 144 தடை

வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு இன்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் உடுப்பி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் நுழையவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவமொக்காவில் வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|