Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 14,952 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 14,952 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Wed, 22 July 2020 2:23:14 PM

சென்னையில் கொரோனாவுக்கு 14,952 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 88,377 ஆக உள்ளது. 14,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,475 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று மேலும், 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,947
அண்ணா நகர் - 1,628
தேனாம்பேட்டை - 1,223
தண்டையார்பேட்டை - 771
ராயபுரம் - 1,029
அடையாறு - 586
திரு.வி.க. நகர் - 1,171
வளசரவாக்கம் - 740
அம்பத்தூர் - 939
திருவொற்றியூர் - 488
மாதவரம் - 387
ஆலந்தூர் - 586
பெருங்குடி - 373
சோழிங்கநல்லூர் - 375
மணலி - 232

Tags :
|