Advertisement

அக்டோபரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 01 Oct 2023 4:53:54 PM

அக்டோபரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

இந்தியா: இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு 2-வது, 4-வது சனிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இப்பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினத்தை சேர்த்து மொத்தமாக 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அதற்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

எனவே, வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் பொதுமக்கள் எந்தெந்த மாநிலத்திற்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான பட்டியலை தெளிவாக பார்த்து அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டுகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

bank holiday,festival ,வங்கிகளுக்கு விடுமுறை,பண்டிகை

வங்கி விடுமுறை நாட்கள் :

2 அக்டோபர் – மகாத்மா காந்தி ஜெயந்தி காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
12 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
14 அக்டோபர் -இரண்டாவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
15 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
18 அக்டோபர் – கதி பிஹு காரணமாக அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
21 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை

இதனை அடுத்து 23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Tags :