Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் கொரியாவிலிருந்து 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது

தென் கொரியாவிலிருந்து 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது

By: Nagaraj Sun, 31 May 2020 7:55:00 PM

தென் கொரியாவிலிருந்து 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது

1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை... தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்த கிட் இருந்தால்தான் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகளைச் செய்ய இயலும்.இந்த கிட்கள் போதிய அளவு இல்லாததால் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனையை சுகாதாரத்துறை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன.

pcr kit,medical works,south korea,experiment ,பிசிஆர் கிட், மருத்துவப்பணிகள், தென்கொரியா, பரிசோதனை

இந்நிலையில் பிசிஆர் டெஸ்ட் கிட்களுக்கு தமிழக அரசு சில தினங்களுக்கு முன் தென்கொரியாவிற்கு கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு சார்பில் 10 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் தரப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5.20 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன. வரும் வாரங்களில் மேலும் 6 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வர உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிட்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்குச் சொந்தமான பண்டகச் சாலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த கிட்கள் தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.

Tags :