Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 75 வது சுதந்திர தினவிழாவில்15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்

75 வது சுதந்திர தினவிழாவில்15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்

By: vaithegi Sun, 14 Aug 2022 12:24:24 PM

75 வது சுதந்திர தினவிழாவில்15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்

சென்னை : நமது நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தமிழக காவல்துறையை சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தின விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று நாளை இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

அந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக சிறப்பிக்கும் வகையில் பல ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.இதனால் அரசு அலுவலகங்கள், நாட்டின் நினைவு சின்னங்கள், பிரபலமான இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் வண்ண வண்ண மின் விளக்குகளை கொண்டு அலங்கரித்து கொண்டாடப்பட உள்ளனர்.

Tags :
|