Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமீரகத்தில் கொரோனா தடுப்பு மருந்து 3-வது கட்ட பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

அமீரகத்தில் கொரோனா தடுப்பு மருந்து 3-வது கட்ட பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

By: Karunakaran Fri, 14 Aug 2020 6:45:00 PM

அமீரகத்தில் கொரோனா தடுப்பு மருந்து 3-வது கட்ட பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. தனியார் சுகாதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அரசு மேற்கொண்டு வரும் இந்த கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் பரிசோதனை கடந்த மாதம் ஜூலை 16-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்றனர். அபுதாபி சுகாதாரத்துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் தன்னை முதல் ஆளாக பதிவு செய்து இந்த பரிசோதனையில் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

volunteers,3rd phase,corona vaccine test,united states ,தன்னார்வலர்கள், 3 வது கட்டம், கொரோனா தடுப்பூசி சோதனை, அமீரகம்

3-வது கட்ட பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 102 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 4 ஆயிரத்து 500 பேர் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 140-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 300 நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரிசோதனையில் ஆர்வத்துடன் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் மூலம் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். இந்த பணிக்கு உதவிட அமீரகத்தில் இருந்து வரும் பல்வேறு நாட்டினரும் தங்களை தன்னார்வலர்களாக பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்ள அதிகமாக விரும்புவதாக அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags :