Advertisement

1500 மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

By: Nagaraj Tue, 06 Oct 2020 08:48:07 AM

1500 மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

1500 மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்... திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்பதினால் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4ம் தேதி இரவு வரையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பரிசோதகர்கள் இடம்பெற்று வந்ததாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

விசேடமாக ஒலிபெருக்கி ஊடாக அவர்களை சுய தனிமைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை அதிபர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

students,alumni,isolation,action,corona ,
மாணவர்கள், மாணவிகள், தனிமைப்படுத்தல், நடவடிக்கை, கொரோனா

மேலும் திவுலுபிட்டிய பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் கடமையாற்றிய அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் சிலர் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களைத் தேடி தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|