Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் திருத்ததிற்காக 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

வாக்காளர் பட்டியலில் திருத்ததிற்காக 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

By: vaithegi Tue, 28 Nov 2023 12:02:29 PM

வாக்காளர் பட்டியலில் திருத்ததிற்காக 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்


சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கு 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் .... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கியது.

வரைவு வாக்காளர் பட்டியலும் அன்றே வெளியிடப்பட்டது. அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தவும் மனுக்கள் பெறப்பட்டன.

electoral roll,name addition,deletion,address ,வாக்காளர் பட்டியல் ,பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி


கடந்த 3-ம் தேதி நிலவரப்படி நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் 36 ஆயிரத்து 142 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுமக்கள் வசதிக்காக தமிழகத்தில் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் முகாம்கள் மூலம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து இதில் 4 லட்சத்து 7,100 பெயர் சேர்ப்பதற்காக அளித்த படிவம் உட்பட 6 லட்சத்து 112 பேர் விண்ணப்பித்தனர். கடந்த நவ.24-ம் தேதி வரை பெயர் சேர்க்க 6.13 லட்சம் பேர் உட்பட 10.45 லட்சம் பேரும் , நவ.26-ம் தேதி பெயர் சேர்க்க 9.13 லட்சம் பேர், பெயர் நீக்கம் செய்ய 1.21 லட்சம் என 15.33 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்து உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :