Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி பேருக்கு கடும் உணவுப் பற்றாக்குறை: செஞ்சிலுவை சங்கம் அறிக்கை

ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி பேருக்கு கடும் உணவுப் பற்றாக்குறை: செஞ்சிலுவை சங்கம் அறிக்கை

By: Nagaraj Fri, 18 Aug 2023 4:50:23 PM

ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி பேருக்கு கடும் உணவுப் பற்றாக்குறை:  செஞ்சிலுவை சங்கம் அறிக்கை

ஆப்கானிஸ்தான்: கடும் உணவு தட்டுப்பாடு… ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பொருளாதார பிரச்னையால் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி பேர் கடும் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

afghanistan,famine,food,severe ,ஆப்கானிஸ்தான், உணவு, கடும், பஞ்சம்

செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக நிலவும் வறட்சியும், கடந்த 2 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியும் மக்களின் தேவையை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் 27 லட்சம் பேர் நாள்பட்ட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் பெரிய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தலிபான் அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில், சர்வதேச உணவுத் திட்டத்துடன் இணைந்து இந்தியா ஐ.நா., கோதுமையை வழங்குகிறது.

Tags :
|
|