Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 15,765 பேர் சிகிச்சை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 15,765 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 17 Nov 2020 09:19:48 AM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 15,765 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று புதிதாக 1,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், நோய் தொற்றுக்கு நேற்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 53
செங்கல்பட்டு - 912
சென்னை - 4,978
கோவை - 883
கடலூர் - 216
தர்மபுரி - 175
திண்டுக்கல் - 135
ஈரோடு - 580
கள்ளக்குறிச்சி - 102
காஞ்சிபுரம் - 483
கன்னியாகுமரி - 210
கரூர் - 297
கிருஷ்ணகிரி - 324
மதுரை - 346
நாகை - 299
நாமக்கல் - 419
நீலகிரி - 195
பெரம்பலூர் - 33
புதுக்கோட்டை - 171
ராமநாதபுரம் - 49
ராணிப்பேட்டை - 164
சேலம் - 781
சிவகங்கை - 133
தென்காசி - 73
தஞ்சாவூர் - 255
தேனி - 69
திருப்பத்தூர் - 111
திருவள்ளூர் - 753
திருவண்ணாமலை - 336
திருவாரூர் - 198
தூத்துக்குடி - 231
திருநெல்வேலி - 260
திருப்பூர் - 720
திருச்சி - 275
வேலூர் - 236
விழுப்புரம் - 216
விருதுநகர் - 88
விமானநிலைய கண்காணிப்பு - 6

Tags :