Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவில் சந்தைக்குள் லாரி புகுந்து விபத்து - 16 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

நைஜீரியாவில் சந்தைக்குள் லாரி புகுந்து விபத்து - 16 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

By: Karunakaran Tue, 03 Nov 2020 09:11:41 AM

நைஜீரியாவில் சந்தைக்குள் லாரி புகுந்து விபத்து - 16 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் அகுங்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் மாலை தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் இந்த சந்தையில் குவிந்திருந்தனர்.

அந்த நேரத்தில், சந்தை அமைந்துள்ள சாலையில் அதி வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சந்தைக்குள் புகுந்தது. இதில் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதனால் அங்கும் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.

16 killed,truck,nigeria,market ,16 பேர் பலி, டிரக், நைஜீரியா, சந்தை

அதி வேகமாக லாரி வந்தவுடன், மக்கள் அனைவரும் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags :
|