Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Mon, 04 July 2022 10:55:32 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று கொரோனா தொற்று சற்று குறைவாகவே பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் 17 ஆயிரத்து 92 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 16 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மட்டும் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,958 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மேலும்,, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,79,477 ஆக அதிகரித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா ,மத்திய சுகாதார அமைச்சகம்

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,13,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மட்டும் 1,97,98,21,197 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,78,383 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,32,978 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 86,39,99,907 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Tags :
|