Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புகளில் சேர 1.66 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

பொறியியல் படிப்புகளில் சேர 1.66 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

By: vaithegi Mon, 22 May 2023 10:13:57 AM

பொறியியல் படிப்புகளில் சேர 1.66 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கியது.

இதனை அடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து கொண்டு வருகின்றனர். மேலும், மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

students,engineering course ,மாணவர்கள் ,பொறியியல் படிப்பு

கடந்த 5-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி வரை 1,66,901 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்து உள்ளனர். இவர்களில் இதுவரை மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 968 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த மாணவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 269 என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :