Advertisement

ஈராக்கில் கொரோனா பாதிப்பு 16,675 ஆக அதிகரிப்பு

By: Monisha Fri, 12 June 2020 6:21:02 PM

ஈராக்கில் கொரோனா பாதிப்பு 16,675 ஆக அதிகரிப்பு

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 76 லட்சத்து 15 ஆயிரத்து 953 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈராக்கில் கொரோனா பாதிப்பு 16,675 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈராக் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:- ஈராக்கில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1,261 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,675 ஆக அதிகரித்துள்ளது.

china,coronavirus,iraq,health sector,coronal impact ,சீனா,கொரோனா வைரஸ்,ஈராக்,சுகாதாரத்துறை,கொரோனா பாதிப்பு

இதுவரை 457 பேர் பலியாகி உள்ளனர். 6,568 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் ஈராக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொது சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் ஈராக் அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஈராக் அரசுக்கு சீன அரசு உதவி செய்து வருகிறது. மருத்துவ சோதனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளையும் சீன அரசு ஈராக்கிற்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும், மூன்று மருத்துவக் குழுக்களை ஈராக்குக்கு சீனா அனுப்பியுள்ளது.

Tags :
|
|