Advertisement

இந்தியாவில் இந்தாண்டு 167.9 மி.மீ. அளவு மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 02 Sept 2022 2:09:32 PM

இந்தியாவில் இந்தாண்டு 167.9 மி.மீ. அளவு மழை பெய்ய வாய்ப்பு

இந்தியா: தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள வங்கக்கடலில் புயல் சுழற்சி உருவாகவும் வாய்ப்புள்ளதாக அறிகுறிகள் தென்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு-மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி சுழற்சி வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain,india ,மழை ,இந்தியா

இதை அடுத்து வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகும் இந்த சூறாவளி சுழற்சியின் காரணமாக மத்திய மற்றும் வட தீபகற்ப இந்தியாவில் அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

மேலும், மேற்கு மற்றும் தெற்கு உத்தரபிரதேசம் மற்றும் வட-வடமேற்கு பீகாரின் சில பகுதிகளில் இந்த மாதம் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு 167.9 மி.மீ. அளவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு 109 சதவிகிதம் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|