Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் சட்ட விதிகளை மீறியதாக 17 வேட்பாளர்கள் கைது; வாகனங்கள் பறிமுதல்

தேர்தல் சட்ட விதிகளை மீறியதாக 17 வேட்பாளர்கள் கைது; வாகனங்கள் பறிமுதல்

By: Nagaraj Mon, 03 Aug 2020 3:05:09 PM

தேர்தல் சட்ட விதிகளை மீறியதாக 17 வேட்பாளர்கள் கைது; வாகனங்கள் பறிமுதல்

விதிமீறல் கைது... பொதுத்தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் குறித்து பதினேழு வேட்பாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் நான்கு வாகனங்களும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குற்றங்கள் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியதாக 8 முறைப்பாடுகள் நேற்று கிடைக்கப்பெற்றன.

violation of rules,candidates,arrest,notice ,விதி மீறல், வேட்பாளர்கள், கைது, அறிவிப்பு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 357 முறைப்பாடுகளில் மொத்தம் 440பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 123 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் பாதுகாப்பில் உள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை: வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை (செவ்வாய்கிழமை) மற்றும் நாளைமறுதினம் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|