குருத்வாரா தாக்குதல் தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் 17 பேர் கைது
By: Nagaraj Tue, 18 Apr 2023 8:19:15 PM
அமெரிக்கா: 17 பேர் கைது... அமெரிக்காவில் குருத்வாரா தாக்குதல் தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் மிஷின்கன் வகை துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
2022ம் ஆண்டில் ஸ்டாக்டன் பகுதியிலும், கடந்த மார்ச் மாதம் சாக்ரமென்டோ பகுதியிலும் சீக்கிய கோயில்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக வடக்கு கலிபோர்னியாவில் 20 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கைதானவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும், அமெரிக்காவில் பல இடங்களில் மாபியா தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குருத்வாரா தாக்குதல் தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் மிஷின்கன் வகை துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.