Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 178 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 178 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 16 June 2020 09:59:34 AM

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 178 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 1,10,744 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

maharastra,coronavirus,corona death,mumbai ,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,கொரோனா உயிரிழப்பு ,மும்பை

நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து 5071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தற்போது கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :