Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய தொழில் கூட்டாளிகளிடம் இருந்து கணக்கில் வராத 18 கோடி ரொக்கம் பறிமுதல்

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய தொழில் கூட்டாளிகளிடம் இருந்து கணக்கில் வராத 18 கோடி ரொக்கம் பறிமுதல்

By: vaithegi Tue, 07 Nov 2023 09:34:12 AM

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய தொழில் கூட்டாளிகளிடம் இருந்து கணக்கில் வராத 18 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ... பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40 இடங்களிலும் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

இதையடுத்து கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோன்று காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.

cash,minister av velu,business partner ,ரொக்கம் ,அமைச்சர் எ.வ.வேலு,தொழில் கூட்டாளி

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய தொழில் கூட்டாளிகளிடம் இருந்து கணக்கில்வராத 18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. காசா கிராண்ட் நிறுவனம் ரூ.700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும்,

அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்திலிருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
|