Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Karunakaran Sun, 12 July 2020 9:11:59 PM

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அங்கு கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அங்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். தற்போது, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணியாற்றிவந்த 18 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

maharashtra governor,coronavirus,bhagat singh koshyari,governor house ,மகாராஷ்டிரா கவர்னர், கொரோனா வைரஸ், பகத் சிங் கோஷ்யரி, கவர்னர் ஹவுஸ்

தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலுவலக ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கூறுகையில், நான் பூரண உடல் நலத்துடன் உள்ளேன். மேலும், நான் என்னை சுய தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. கொரோனா தொடர்பான அறிகுறிகளும் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.


Tags :