Advertisement

மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு

By: Nagaraj Wed, 08 June 2022 2:38:28 PM

மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு

மும்பை: கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அடுத்தடுத்து முழு முடக்கம் காரணமாக மது குடிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த பழக்கத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

முழு முடக்கம் நீங்கியபிறகும், மது குடிப்பவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. சுமார் 20 சதவீதம் பேர் மது போதையில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

liquor sales,corona,india,substantial volume,rise ,
மது விற்பனை, கொரோனா, இந்தியா, கணிசமான அளவு, உயர்வு

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதுபோல மது பாட்டில்கள் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது. கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வரும் ஆண்டுகளில் மது விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags :
|
|