Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் விடுவிப்பு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் விடுவிப்பு

By: Nagaraj Fri, 15 May 2020 7:03:39 PM

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் விடுவிப்பு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 180 பேர் விடுவிப்பு... வவுனியா, வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 180 பேர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

marines,isolation,action,housing,relatives ,கடற்படை வீரர்கள், தனிமைப்படுத்தல், நடவடிக்கை, வீடுகள், உறவினர்கள்

நீர்கொழும்பு, அநுராதபுரம், குருணாகல், பொல்காவல, ரம்பாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.

குறித்த முகாமுக்கு கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கடற்படையைச் சேர்ந்த குடும்பத்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

marines,isolation,action,housing,relatives ,கடற்படை வீரர்கள், தனிமைப்படுத்தல், நடவடிக்கை, வீடுகள், உறவினர்கள்

இந்நிலையில், குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் படிப்படியாக தனிமைப்படுத்தல் நடவடிக்கை முடிவடைந்து அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|